பழம்பெரும் நூல்கள் அடியோடு அழிந்து போவது சீன வரலாற்றில் தொன்று தொட்டுத் தொடரும் ஒரு பாரம்பரியம்.இதனைக் கருத்திற்கொண்டு பார்க்கையில் சுன் சூவின் நூல் மங்காச் சிறப்பைப் பறைசாற்றுகிறது.இன்றும் இந்நூலுக்கு சீனாவில் மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.நவீன சீன இராணுவத்திலும் அதிகாரகளுக்கு பால பாடமாகவும் மூல பாடமாகவும் திகழ்வது போர்க்கலை யே! இருபதாம் நூற்றிண்டின் மாபெரும் சீன புரட்சியாளரான மா - சே - துங் தன் போர்களில் சுன் குவின் யுக்திகளை வெகுவாகப் பயன்படுத்தினார்.சுன் சூவைத் தன் "ஆசான்" என்றே அவர் கூறி வந்தார்.அவர் மட்டுமல்ல;வியட்நாமின் ஹே -சி-மின் வல்லரசான அமெரிக்கா எவ்வளவோ முயன்றும் இன்றுவரை அசைவக்க முடியாத இரும்பு மனிதரான குட்டி கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரும் "போர்க்கலை"யின் உபாயங்களைத் தங்கள் போர்களில் பிரயோகித்தவர்களை...!ஜப்பானியர்களுக்கோ, இன்று இந்நூல் தேசிய வேதம்.பல மேற்கத்திய நாடுகளின் இராணுவங்களுக்கும் கட்டாயப் பாடமாகத் திகழ்கிறது இந்நூல். போரில் மட்டுமன்றி அன்றாட வாழ்விலும் தொழில் வர்த்தகம் ,நிர்வாகம் ,சுய முன்னேற்றம் போன்ற துறைகளிலும் இதன் உபயோகம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.