About the Book
‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘ஊக்குவிப்பு’ என்ற இந்நூலில், பிரபல நூலாசிரியரும் பேச்சாளருமான பிரையன் டிரேசி தன்னுடைய பல்லாண்டுகால அனுபவங்களின் அடிப்படையில், வேலையில் ஒரு தனிநபரின் செயற்திறனையும் குழுக்களின் செயற்திறனையும் அதிகரிப்பதற்கும், அற்புதமான விளைவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அவர்களுடைய ஆற்றலை அதிகரிப்பதற்கும் உதவக்கூடிய சக்திவாய்ந்த 21 வழிமுறைகளை விளக்கியிருக்கிறார். அவற்றில் பின்வருவனவும் அடங்கும்: · உங்கள் ஊழியர்கள் தங்கள் வேலை குறித்து ஆழ்விருப்பம் கொள்ளும்படி செய்வது எப்படி · உங்கள் ஊழியர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளுவதற்கு உதவக்கூடிய விதத்தில் சவாலான வேலைகளை அவர்களுக்குக் கொடுப்பது எப்படி · சுதந்திரம், சார்பு ஆகிய இரண்டு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி உங்கள் ஊழியர்களைத் திருப்திப்படுத்துவது எப்படி · அவர்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்ற தடைகளைக் களைவது எப்படி · அவர்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான பின்னூட்டக் கருத்துக்களை அவர்களுக்கு வழங்குவது எப்படி